Latestமலேசியா

விரைவில் பக்காத்தான் வீழும்: மீண்டும் அம்னோ ஆட்சி- அன்வார் மூசா

கோலாலம்பூர், ஆக.10- அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே, அம்னோ மீண்டும் நாட்டில் ஆட்சியை அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டான்ஶ்ரீ அன்வார் மூசா அறிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சித் தொடங்கிய மூன்று மாதங்களில், அவர்களின் திறன் குறித்து தாம் அறிந்துக் கொண்டதாகவும், அக்கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே, அக்கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“பொதுத் தேர்தல் குறித்து இப்போது நாங்கள் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. இடைக்காலத்திலேயே, மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து தான் நாங்கள் யோசித்து வருகிறோம்.

“ஐந்தாண்டு காலத்தில் தான் நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும். அதற்கு நீண்ட கால அவகாசம் உண்டு. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களால் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அம்னோ அனைத்து கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற முன்வரும். பிகேஆர், ஜசெக, அமானா மற்றும் பெர்சாத்து போன்ற கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற அம்னோ தயாராக உள்ளதாக அன்வார் மூசா தெரிவித்துக் கொண்டார்.

மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற அம்னோவின் கோட்பாடுகளை ஜசெக கட்சி ஏற்றுக் கொண்டால், அக்கட்சியுடன் இணைந்து செயலாற்ற அம்னோ முன்வரும் என்று அவர் சொன்னார்.

இதனிடையில், தேசிய முன்னணியின் கூட்டணியில் அம்னோ, மசீச மற்றும் மஇகா கட்சிகள் மற்றும் தான் இடம் பெற்றுள்ளன என்றும், அம்மூன்று கட்சிகளும் தற்போது தனியாக செயல்பட வேண்டிய அவசியம் உண்டு.
அதனால், தேசிய முன்னணி தற்காலிகமாக ‘இடைநீக்கம்’ செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker