Latestஇந்தியா

‘விஸ்பரூபம் 2’ வெளியீடு: கமலுடன் மோதும் 4 படங்கள்! ஜெயிப்பார்களா?

சென்னை,ஆகஸ்ட்.10- கமலின் ‘விஸ்வரூபம்-2’ படம், வெளியீடு கண்டுள்ள நிலையில் ‘பியார் பிரேமா காதல்’ உட்பட இன்று மொத்தம் ஐந்து படங்கள் திரையில் வெளியீடு காண்கின்றன.

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியீடு காண்கின்றன. கமலின் அரசியல் பிரவேசத்திற்குப் பின் வெளியாகும் படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இது தவிர, பிக்பாஸ் பிரபலங்களான ஹரீஸ் கல்யாண், ரைசர் நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த இரண்டு பெரிய படங்கள் தவிர இன்று ‘3 ரசிகர்கள்’, ‘காதல் எனக்குப் பிடிக்கும்’ மற்றும் ‘அழகு மகன்’ என்ற மேலும் மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன.

நேரடி தமிழ்ப்படங்களான இந்த ஐந்து படங்களுடன் ஹாலிவுட் படமான “தி மெக்” படமும் தமிழில் இன்று திரைக்கு வருகிறது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாம் பாகமும் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே அதனுடன் தைரியமாக இன்று வெளியீடு காணும் மற்ற நான்கு படங்களும் தாக்குப் பிடிக்குமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
கடந்த வாரம் ‘கஜினிகாந்த்’ படத்தையும் சேர்த்து மொத்தம் 10 படங்கள் வெளியாகின. அவற்றில் கஜினிகாந்த் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்றவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker