Latestமலேசியா

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த இது சரியான நேரமல்ல- துன் மகாதீர்

சிலாங்கூர், ஆகஸ்ட்.11- தற்போது தேசிய கடனை அடைக்கும் சுமையை நாடு எதிர்கொண்டு இருப்பதால் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த இது சரியான நேரம் அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏறத்தாழ 16 லட்சம் அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள். நாடு பெரிய கடன் சுமையை சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் கடப்பாடை அரசாங்கம் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது கடினமான ஒன்று என மகாதீர் தெளிவுப்படுத்தினார்.

நேற்றிரவு யாயாசான் சிலாங்கூரில் பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்பு பிரதமர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker