Latestமலேசியா

கப்பல் வேண்டுமா? நாடு திரும்புங்கள்!- ஜோ லோவுக்கு மகாதீர் அழைப்பு

கிள்ளான், ஆகஸ்ட்.11- ‘இக்குவானிமிட்டி’ உல்லாச கப்பல் தன்னுடையது என்று ஜோ லோவ் நினைத்தால், அந்தக் கப்பலைக் கோருவதற்கு மலேசியாவுக்கு வரட்டும் என பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

அந்த கப்பலை மலேசியா பறிமுதல் செய்ததை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடியவர் தொழிலதிபர் ஜோ லோவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

எனினும், சட்ட நடவடிக்கை எடுக்கும் முன் கப்பல் தனக்கு சொந்தமானதென ஜோ லோவ் முதலில் நிரூபிக்க வேண்டும். அந்த விலை உயர்ந்த கப்பலை வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது எனவும் அவர் தெரிவிக்க வேண்டும் என துன் மகாதீர் சொன்னார்.

இன்று காலையில் இக்குவானிமிட்டி கப்பலை பார்வையிட்ட பின்னர் துன் மகாதீர் செய்தியாளர்களிடம் பேசினார். நிதியமைச்சர் லிம் குவான் எங், தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு ஆகியோரும் மகாதீருடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker