Latestமலேசியா

கோழிக் கூண்டுக்குள் புகுந்தது பூனை அல்ல…புலி..!!!

கெடா, ஆகஸ்ட்.11- சிக் மாவட்டத்திலுள்ள கம்போங் ஜெலுத்தோங்கில், தனது வீட்டுக்கு பின்னால் இருந்த கோழிக் கூண்டுக்குள் பூனை புகுந்துள்ளது என்று நினைத்து அதை விரட்ட அருகே சென்றபோதுதான் வந்தது பூனை அல்ல புலி என்று கமாருவா என்ற பெண்மணிக்கு தெரிந்திருக்கிறது.

இன்று காலை 6.30 மணி அளவில், கோழிக் கூண்டிள் உள்ள கோழிகள் அலறி அடித்துக் கொண்டு கத்தும் சத்தம் கேட்டிருக்கிறது. கமாருவா உடனே என்னவென்று கோழிக் கூண்டை எட்டிப் பார்த்தபோது பூனை போன்று ஒரு விலங்கு கூண்டுக்குள் இருப்பதை அவர் கண்டிருக்கிறார்.

சரி அந்த பூனையை விரட்டி விடலாம் என கமாருவா கோழிக் கூண்டுக்கு அருகே செல்ல செல்ல ‘இது பூனை மாதிரியே இல்லையே, ஐயோ புலி’ என அலறி அடித்துக் கொண்டு திரும்ப ஓடி வந்திருக்கிறார் கமாருவா.

பயந்து போன கமாருவா உடனே சிக் பொது தற்காப்பு படையினரின் உதவியை நாடியிருக்கிறார். உடனே சம்பவ தலத்திற்கு வந்த தற்காப்பு படையினர் அந்த புலியைப் பிடிக்க முற்பட்டனர். தன்னை பிடிக்க வருகிறார்கள் என்றும் அறிந்ததும் புலி ஆவேசமானதால் அதனை பிடிக்க தற்காப்பு வீரர்கள் பெரும் பாடுபட்டுள்ளனர்.

புலி பசிக்கு இரைத் தேடி அருகிலுள்ள காட்டிலிருந்து வந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. அந்த புலி வனவிலங்கு துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker