Latestமலேசியா

திருநங்கைளுக்கு எதிரான பாகுபாடுகளை நிறுத்துவோம்! -முஜாஹிட் கோரிக்கை

புத்ரா ஜெயா, ஆகஸ்ட். 11- திருநங்கைகள் சமுதாயத்திற்கு எதிரான அநீதியான பாகுபாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஜாஹிட் யுசோப் ராவா வலியுறுத்தினார்.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சமந்தப்பட்ட அமைப்புகளுடன் குறிப்பாக, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தொழில் முனைவர் அமைச்சு ஆகியவற்றுடன் அணுக்கமாக ஒத்துழைக்கப் போவதாக முஜாஹிட் சொன்னார்.

திருநங்கைகளுக்கு எதிராக பாகுபாடுகளும் சமூகப் புறக்கணிப்புகளும் தொடர்ந்து நிலவி வருவதை தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. மக்கள் தொடர்ந்து அவர்களை புறக்கணித்தும் தண்டித்தும் வருவார்களேயானால் அவர்கலின் நிலை தொடர்ந்து இப்படியே தான் இருக்கும் என்று சமய விவகாரங்களுக்கான அமைச்சரான முஜாஹிட் விளக்கினார்.

மக்கள் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை அளிக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பளித்தால் அவர்களும் சமுதாயத்திற்காகவும் அரசாங்கத்திற்காவும் பங்களிப்பினைச் செய்ய முடியும் என்றார் அவர்.

திருநங்கைகளின் நலன்களுக்காக போராடிவரும் சேவையாளரான நிஷா அயூப்பை சந்தித்துப் பேசிய பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைய சில தினங்களுக்கு முன்னர் பினாங்கு ஜியார்ஜ் டவுனில் நடந்த கண்காட்சி ஒன்றிலிருந்து நிஷா அயூப்பின் புகைப்படம் அகற்றப்பட்ட சர்ச்சை குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

திருநங்கைகளை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் எந்தெந்த வகையில் உதவு முடியும் என்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker