Latestஇந்தியா

‘பாசக்கார’ குரங்கிடமிருந்து குழந்தையை மீட்க போராடிய தாய்! -(VIDEO)

பெங்களூர், ஆக்ஸ்ட்.11- குழந்தையை நெருங்கி ஆசையோடு தொட்டுப் பார்த்த ஒரு பாசக்கார குரங்கு, பின்னர் அந்தக் குழந்தையை எப்படியாவது தூக்கிச் சென்று விட முயன்ற போது குழந்தையின் தாய் உள்பட பலர் மிகக் கடுமையாக போராட நேர்ந்தது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோயில் ஒன்றில் அதில் குழந்தை ஒன்றை பிடித்துக் கொண்ட குரங்கு அந்தக் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றது.

முதலில் குழந்தையிடம் நெருங்கி பாசத்தோடு இருப்பது போல தோன்றியதால் குழந்தையின் தாய் உள்பட அங்கிருந்தவர்கள் அது பற்றி பயம் கொள்ளவில்லை.

பின்னர் குழந்தையை தாய் உள்பட வேறு யாரும் நெருங்கவிடாமல் ஆவேசத்துடன் அந்தக் குரங்கு தாக்க முன்ற போது அனைவரும் அச்சத்திற்கு உள்ளாயினர். அங்கிருந்த மக்களும் குழந்தையின் தாயும் குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்றப் போராடினர்.

அதில் அங்கிருந்த சிலர், குரங்கின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அது சாப்படுவதற்காக உணவுப் பொருள்களை குரங்கின் முன் போட்டனர்.

ஆனால் அந்தக் குரங்கு, குழந்தையின் அருகில் யார் வந்தாலும் கடிக்கப் பாய்ந்தது. அதன் பிடியிலிருந்து குழந்தையை மீட்க என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் திணறினர். வலுக்கட்டாயமாக மீட்க முனைந்தால் அந்தக் குரங்கு குழந்தையை தாக்கி விடுமோ எடவர்கள் அஞ்சினர். குரங்கின் பிடியில் சிக்கிய குழந்தையும் வீறிட்டு அலறிய வண்ணம் இருந்தது.

அந்தக் குரங்கு அசந்த நேரம் பார்த்து, குரங்கின் பின்னால் இருந்த நபர் திடிரென பாய்ந்து குழந்தையின் கையைப் பிடித்து இழுத்து குழந்தையை தூக்கியெடுத்துக் கொண்டார்.

இதைக் கண்ட குரங்கு உடனே அந்த நபரைத் தாக்க விரட்டியது. ஆனால் அதற்குள் அவர் குழந்தையுடன் அங்கிருந்து ஓடிவிட்டதால் செய்வதறியாமல் குரங்கு அங்கிருந்து ஒடத் தொடங்கிவிட்டது.

மேலும் இது தொடர்பாக காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker