Latestஉலகம்

முகத்தை மூடியவாறு தாய்ப்பால் ஊட்டிய தாய்! குவியும் பாராட்டு

மெக்சிகோ சிட்டி, ஆகஸ்ட்.11- மெக்சிக்கோ நாட்டில் முகத்தை மூடிக்கொண்டு தனது பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உணர்வுப் பூர்வமான பந்தத்தை ஏற்படுத்துவதும் பிறந்தவுடன் குழந்தைக்கு கிடைக்கும் முதல் பரிசாக பார்க்கப்படுவதும் தாய்ப்பால் தான். இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாச நோக்கில் போல் பார்க்கப்படுவதாக பல விவாதங்கள் நடந்து வருகின்றன.

மெக்சிகோவில் இளம் தாய் ஒருவர் அமர்ந்தப்படி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் கொடுக்கும் அந்தப் பெண் தனது முகத்தை துணியால் மூடிக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை அந்த பெண்ணின் உறவுக்காரப் பெண் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார், “குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதைத்தான் அவளும் செய்துள்ளார். துணியால் அவளது முகத்தை மறைத்துக் கொண்டாள் என்று கூறியுள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த வலைவாசிகள் பலரும் அந்தப் பெண்ணிற்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர். காரணம் அந்தப் பெண் முகத்தை மறைக்காமல் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்திருந்தால் அதையும் ஒரு விவாதப் பொருளாக மாற்றி இருப்பார்கள். நல்ல வேளை எவ்வித விவாதத்திற்கும் இடமளிக்காமல் அவர் தனது முகத்தையே மூடிக் கொண்டார் என்று கருத்து கூறியுள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker