Latestமலேசியா

அடுத்து ஜோலோவின் ஜெட் விமானத்துக்கான வேட்டை தொடக்கம்

செர்டாங்,ஆகஸ்ட்.12- சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டு வந்த ‘இக்குவாமினிட்டி’ உல்லாச கப்பலை கைப்பற்றியதை அடுத்து சிங்கையில் இருக்கும் அவரது ஜெட் விமானத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்யவிருப்பதாக பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அந்த ஜெட் விமானமும் 1எம்டிபி பணத்தில் வாங்க்கப்பட்டதாக நம்பப்படுவதால், அந்த விமானத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஜோ லோவின் ‘போம்பார்டியர் குளோபல் 5000’ ஜெட் விமானம் சிங்கையில் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் இவ்வாண்டு ஜனவரியில் உறுதிப்படுத்தியது.

அதன் விலை 143 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker