Latestஉலகம்

“அணில் குட்டி விரட்டுகிறது, காப்பாற்றுங்கள்!” – நபர் போலீசில் புகார்

பெர்லின், ஆகஸ்ட். 12- ஜெர்மனியின் காவல் துறையினருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னை அணில் குட்டி ஒன்று துரத்துகிறது என அச்சத்துடன் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். அப்பொழுது அவர்கள் கண்டகாட்சி மிகவும் வினோதமாக காணப்பட்டது.

புகார் அளித்த நபரை உற்சாகத்துடன் துரத்திச் சென்ற அணில் குட்டி அவ்வேளையில் சோர்வடைந்து நன்றாக உறங்கி விட்டது. இதனால் அந்நபர் நிம்மதி அடைந்து உள்ளார். மேலும் அந்த அணில் குட்டியைக் காவல் துறையினர் மீட்டு தத்தெடுத்து அதற்கு “கார்ல்” என பெயரும்  வைத்துள்ளனர்.

தற்போது கார்ல் விலங்கு மையம் ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அணில் குட்டியானது, அதனுடைய தாயாரிடம் இருந்து பிரிய நேர்ந்துள்ளது.

அவ்வாறு பிரியும் அணில் குட்டிகள், தங்களுக்கு எந்த மனிதரையாவது பிடித்து விட்டால், அந்த மனிதரின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருக்கும் இயல்பை கொண்டிருக்கும். அதனால் அது அந்நபரை தொடர்ந்து விரட்டி உள்ளது எனப் போலிசார் கூறியுள்ளனர்.

இதுபற்றி காவல் துறையை சேர்ந்த கிறிஸ்டினா கிரென்ஜ் கூறும் போது, தனது தாயாரிடம் இருந்து தொலைந்து போகும் அணில் குட்டிகள் பின்னர் மற்ற நபரின் மீது தனது கவனத்தினை செலுத்த தொடங்கி விடுகிறது. அதன் அடிப்படையில் தான் அது அந்நபரை துரத்திக் கொண்டிருந்தது எனக் கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker