Latestமலேசியா

அன்னிய தொழிலாளர்கள் புதிய கொள்கை: செவ்வாயன்று அறிவிப்பு – குலா

ஈப்போ, ஆகஸ்ட். 12- அன்னியத் தொழிலாளர்களை வேலைக்கு கொண்டு வருவது தொடர்பான புதிய கொள்கைத் திட்டத்தை அரசாங்கம் செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் சொன்னார்.

இந்தப் புதிய கொள்கை மிகவும் முறைப் படுத்தப்பட்டதாக இருக்கும். நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப அன்னியத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்தக் கொள்கை வகுக்கப்படுகிறது என்றார் அவர்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும், மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அன்னியத் தொழிலாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கப்படுவதும், நாட்டிற்குள் அவர்கள் கொண்டு வரப்படுவதும் அமையும் என்றார் அவர்.

நம் நாட்டிலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டிற்கும் மேல் போகாத விதத்தில் அன்னியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது தான் நம்முடைய இலக்கு. எனவே முறைப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டமே நமக்கு இப்போது தேவை என்று அமைச்சர் குலசேகரன் சொன்னார்.

தம்முடைய அமைச்சும் உள்துறை அமைச்சும் இது குறித்து சந்தித்து விவாதிக்கவுள்ளது. இந்த சந்திப்புக்கு பிரதமர் தலைமை வகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் அன்னியத் தொழிலாளர்களின் தேவை, மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.

 

 

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker