Latestஇந்தியா

கார் விபத்து: விக்ரமின் மகன் துருவ், குடிபோதையில் ஓட்டினாரா?

சென்னை, ஆகஸ்ட்.12- நடிகர் விக்ரமின் மகன் துருவ் குடித்து விட்டு கார் ஓட்டி விபத்துக் உள்ளானதோடு பிற வாகனங்களுக்கு கடும் சேதத்தையும் ஏற்படுத்தியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.

தற்போது பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற துருவ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் துருவ் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.

இவர் இடித்ததில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளன. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்து ஏற்பட்டவுடன் துருவ் உட்பட அந்தக் காரில் வந்த அவரது நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதன் பின் சென்னை பாண்டிபஜார் போலீசார் துருவ்வை பிடித்து தற்போது விசாரணை நடத்தினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker