Latestமலேசியா

கோலாலம்பூர் நீதிமன்றம் அருகேயுள்ள காட்டில் தீ

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.12- ஜாலான் கூச்சிங் அருகேயுள்ள 2 ஹெக்டர் காட்டுப் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இச்சமபவம் நேற்றிரவு நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் செந்தூல், ஶ்ரீ ஹர்த்தாமாஸ், ஹங் துவா ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் சுமார் 32 பேர் இரவு மணி 9.56-க்கு சம்பவ இடத்தை சென்றடைந்தனர்.

இத்தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அந்தக் காட்டுப் பகுதிக்கு அருகே இருந்த விளம்பர பலகையும் தீப்பற்றி எரிந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர் கைரூடின் ரஹ்மான் தெரிவித்தார். சம்பவ இடத்தை அடைந்ததும் தீயணைப்பு வீரர்கள் தீ காட்டுப் பகுதியில் இருந்து அருகிலுள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை நோக்கி பரவுவதைப் பார்த்திருக்கிறார்கள்.

தீயை அவர்கள் ஒரு மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker