Latestமலேசியா

சட்டப்படி நடக்காதவர் மகாதீர்! சாடுகிறார் ஜோ லோ

கோலாலம்பூர், ஆகஸ்ட். 12- தம்முடைய ஆட்சியில் முறையான சட்ட விசாரணைகளுக்கு இடமில்லை என்பதை துன் மகாதீர் மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார் என்று மலேசியாவினால் தேடப்படும் ஜோ லோ என்ற ஜோ டெய்க் லோவ் என்ற தொழிலதிபர் கூறியுள்ளார்.

சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ‘இக்குவானிமிட்டி’ என்ற உல்லாசக் கப்பலை மலேசியா கைப்பற்றி இருப்பது பற்றிய கருத்துரைத்த போது ஜோ லோ இவ்வாறு கூறியுள்ளார்.

மலேசியா அரசாங்கத்தின் 1எம்டிபி நிதி நிறுவனத்திலிருந்து திருடிய பணத்தில் இந்த உல்லாசக் கப்பல் வாங்கப்பட்டுள்ளது என்பதால் இதனை மலேசிய அரசாங்கம் கைப்பற்றியது. இதனை விரைவில் விற்பனை செய்யும் என்றும் அதிக அளவில் ஏலத்தில் எடுக்க முன் வருபவர்களுக்கு கப்பலை விற்று, அரசாங்கம் இழந்த பணத்தை மீட்கும் என்றும் துன் மகாதீர் நேற்று அறிவித்திருந்தார்.

இந்தக் கப்பல் ஜோ லோவுக்கு சொந்தமானது என்றும் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருப்பதாக மகாதீர் குறிப்பிட்டார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் ஓர் ஆதாரத்தைக் கூட தாக்கல் செய்யாமல், அதற்கு முன்பாகவே ஜோ லோவை குற்றவாளி என மகாதீர் அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது என்று ஜோ லோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜோ லோவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் எதனையும் நிருபித்து விடவில்லை என்று அந்தப் பேச்சாளர் கூறினார். மேலும் சட்ட நடைமுறைகள் எதனையும் மதிக்காமல் மகாதீர் அரசாங்கம் நடந்து கொள்கிறது என்ற ஜோ லோவின் கருத்தை அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker