Latestஉலகம்

தாயின் உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுமி!- குவியும் பாராட்டுகள்

லண்டன்,ஆகஸ்ட். 12- பிரிட்டனில் படிக்கட்டில் தடுமாறி விழுந்து சுய நினைவை இழந்த தாயாரை, 4 வயது சிறுமி சாமர்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பிரிட்டனில் டர்ஹாம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்தது. தன்னுடைய தாயார் மயக்கமுற்று கிடப்பதைக் கண்ட 4 வயது சிறுமி அழுது அக்கம் பக்கம் திரியாமல், தொலைபேசியில் 999 எண்ணுக்கு அழைத்துள்ளார்.

ஆறு நிமிடத்தில் அந்த அழைப்பில், தமது தாயார் தூக்கத்தில் இருப்பதாகவும் ஆனால், தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். சிறுமியின் குடும்ப பெயரை கேட்ட அதிகாரிகளிடம் அது தமக்கு நினவில் இல்லை. ஆனால் தனது செல்லநாயின் பெயர் மாக்ஸ் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தகவலைத் திரட்டிய போலிசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். போலிசாரை உள்ளே அனுமதித்த சிறுமி அவர்களிடம் நடந்தவற்றை மீண்டும் சொல்லி இருக்கிறார்.

இதனிடையே மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து மயக்கமுற்று கிடந்திருந்த சிறுமியின் தாயாரை மீட்டனர். சிறுமியின் தாயார் ஏலன் ஓசெல்டோனின் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டதால். இதுவே அவரை படிக்கட்டு ஏறும் போது நிலை தடுமாறி விழச் செய்திருக்கிறது.

“எனது மகள் மிலா டோபி மட்டும் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் தற்போது நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்” என கன்கலங்கக் கூறினார் இளம் தாய் ஏலன். இதனிடையே சிறுமியின் அந்த 6 நிமிட உரையாடலை டர்ஹாம் போலீசார் சமுக ஊடகங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

அதேவேளையில் அந்த சிறுமிக்கு போலீஸ் துறை துணிச்சலுக்கான வீர விருதையும் அளித்து கௌரவித்துள்ளது.  வலைவாசிகள் அந்தச் சிறுமியின் செயலை பாராட்டி புகழ் மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

 

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker