Latestமலேசியா

ரிம3.5 மில்லியன் கொள்ளை: நஜிப்பின் பாதுகாவலர்கள் விடுவிப்பு

புத்ராஜெயா,ஆகஸ்ட்.12- 14-ஆவது பொதுத் தேர்தலின் பயன்பாடுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்த 3.5 மில்லியன் ரிங்கிட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பிரதமர் துறையின் முன்னாள் பாதுகாவலர்கள் 15 பேர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களிடம் ஐந்து நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில் அவர்களை மாஜிஸ்திரேட் நதிரா அப்துல் ரஹிம் விடுவிக்க அனுமதியளித்தார்.

இந்த 15 பேரோடு கைதான மற்ற இருவர் நேற்று முன்தினமே விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சென்றிருந்தார்.அதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அவரது முன்னாள் பாதுகாவலர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker