Latestஉலகம்

லண்டனில் விஜய் மல்லையா வீட்டில் தங்க கழிப்பறை!!

லண்டன், ஆகஸ்ட்,12- இந்ந்தியாவில் தலைமறைவாகி தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மாளிகையில் தங்க கழிப்பறை இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9,000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார்.

இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகின்றனர். அதோடு நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையாவின் ஆடம்பர குடியிருப்பில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட் என்பவர் மல்லையா குடியிருப்புக்கு சென்ற நிலையில் அதை அவர் பார்த்துள்ளார். இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இக்கழிப்பறையின் சரியான விலை என்ன என்ற விபரம் வெளியாகவில்லை.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker