Latestமலேசியா

‘ஆங்கிலத் திறனை வலுப்படுத்துக!’ -போலீசுக்கு பிரதமர் உத்தரவு! -ஐஜிபி

கோலாலம்பூர், ஆக.13- புக்கிட் அமான் தலைமையகத்தில் பணிபுரியும் காவல் துறையினர், தங்களின் ஆங்கிலத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் படைத் தலைவர்கள், மற்றும் அதன் அதிகாரிகள் தங்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் தாம் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவரான டான்ஶ்ரீ முகமட் பூஸி ஹருண் கூறினார்.

“சரியான நேரத்தில் பிரதமர் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட முயற்சியாக புக்கிட் அமான் தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர், அப்பயிற்சிகள் நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்” என்று பூஸி ஹருண் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், காவல் துறைக்கு ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப் பட்டன. அப்பயிற்சிகள் வழங்கப் பட்ட போதிலும், போலீஸ்காரர்களின் ஆங்கிலத் திறன் வலுவடையவில்லை என்று அவர் சொன்னார்.

“உலக அளவில் தேர்ச்சி பெற்ற படையாக தேசிய போலீஸ் படை திகழ வேண்டுமென்றால், போலீஸ்காரர்கள் ஆங்கிலத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நாட்டிலுள்ள 14 போலீஸ் பயிற்சி கல்லூரிகளில் இந்த ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப் படும்” என்றார் அவர்.

எதிர்காலங்களில் இப்பயிற்சிகளை வழங்க போலீஸ் படை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்குமா என்ற கேள்விக்கு, அதற்கான சாத்தியம் உண்டு என்று அவர் கருத்துரைத்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker