Latestஇந்தியா

ஆபாசப் படங்களை கட்டாயமாக பார்க்க வைத்து பலாத்காரம்! இளம்பெண்கள் புகார்

போபால். ஆகஸ்ட்.13- விடுதி இயக்குனர் தன்னை வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசம், போபாலில் உள்ள விடுதி ஒன்றில் பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 20 வயது இளம்பெண் கடந்த வாரம் போலீசில் பாலியல் புகார் செய்தார்.

இதே போன்று அடுத்தடுத்த 2 நாள்களில் மேலும் 2 பெண்கள் புகார் அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த புதனன்று மற்றொரு இளம் பெண் புகார் அளித்ததால் விடுதியின் இயக்குனர் அஸ்வினி ஷர்மாவை போலீசார் கைது செய்தனர்.

புதனன்று அந்தப்பெண் இந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அஸ்வினி ஷர்மா, அவரது வீட்டில் தன்னை அடைத்து, ஆபாசப் படங்களை பார்க்க வைத்து பின் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்கு எதிர்த்துப் போராடிய போது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில் கைதான அஸ்வினி ஷர்மா பாஜக தலைவர்களுடன் நெருக்கமானவர் என்றும் அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு இத்தகைய தகாத காரியத்தை தொடர்ந்து செய்து வந்துள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker