Latestமலேசியா

உங்களின் பிறப்புறுப்பை வைத்து முடிவு செய்யுங்கள்! –பெர்லீஸ் முப்தி

கோலாலம்பூர், ஆக.13- ஓரினத் தொடர்பாளர்களின் உரிமைகள் குறித்து பல சர்ச்சைக் கருத்துகள் பரிமாறப் பட்டு வரும் வேளையில், திருநங்கைகள் பொது கழிவறைகளை உபயோகிப்பது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருநங்கைகள் பொது இடங்களுக்குச் செல்லும் போது அவர்கள் ஆண் கழிவறைகளை உபயோகிக்க வேண்டுமா அல்லது பெண் கழிவறைகளை உபயோகிக்க வேண்டுமா? என்ற கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.

“திருநங்கைகள் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு முன்னர், அவர்கள் அவர்களின் பிறப்புறுப்புகளை பார்த்து, அவர்கள் எந்தக் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும்” என்று பெர்லீஸ் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமய போதகரான டத்தோ முகமட் அஸ்ரி சைனூல் கூறியுள்ளார்.

அஸ்ரி தனது முகநூல் பக்கத்தில் திருநங்கைகள் எந்தக் கழிவறையை உபயோகிக்க வேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

“திருநங்கைகள் பொது கழிவறைகளை உபயோகிப்பதற்கு முன்னர், தங்களின் பிறப்புறுப்புகளை பார்க்க வேண்டும். ஆண் உறுப்பை கொண்டிருப்போர், ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும். பெண் உறுப்பை கொண்டிருப்போர், தயவு செய்து பெண்கள் கழிவறையை பயன்படுத்துங்கள்” என்று அவர் தனது முகநூலில் கூறியுள்ளார்.

“உங்களுக்கு எவ்வித பிறப்புறுப்பும் இல்லையெனும் பட்சத்தில், மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவர்கள் நீங்கள் பேறு குறைந்தவர் என்று கூறினால், பேறு குறைந்தவர்களுக்கான கழிவறையை நீங்கள் உபயோகிக்கலாம்” என்று அஸ்ரி சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker