Latestஇந்தியா

நடிப்புக்கு விரைவில் முழுக்கு! முழுநேர அரசியலில் கமல்!

சென்னை, ஆகஸ்ட்.13- முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவை தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி, நடிகர் கமல் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

‘இந்தியன் 2’ படத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல், நடிப்பில் விஸ்வரூபம் 2 கடந்த 10ஆம் தேதி வெளியானது.

முதல் பாகத்தின் பல காட்சிகளோடு சேர்த்து நான்கு சண்டைக் காட்சி மற்றும் காதல் காட்சிகளை இணைத்து இரண்டாவது பாகத்தை உருவாக்கியுள்ளார்.

மூன்றாம் பாகத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து விஸ்வரூபம் 3 வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடித்துள்ள கமல், அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதுவே கமலின் கடைசி படமாக அமையும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து கமல் கூறுகையில், அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டால் நடிப்பை விட்டு விடுவேன். நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் தீவரக் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker