Latestமலேசியா

நோய்வாய்ப்பட்ட சிறுவனின் தீயணைப்பு வீரர் ஆகும் கனவு நனவானது

ஜோர்ஜ்டவுன்,ஆகஸ்ட்.13- வளர்ந்ததும் தீயணைப்பு வீரர் ஆகும் 8 வயது சிறுவன் நோர் பாரிஸ் ஹைக்கால் முகமட் நோர்ஹிஷாமின் கனவு இப்போதே நனவானது. மூளைக் கட்டிப் பாதிப்புக்கு ஆளான அச்சிறுவனை ‘Make-A-Wish Malaysia’ எனப்படும் அரசு சாரா அமைப்பு ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் ஒத்துழைப்போடு தீயணைப்பு வீரனாக்கி அழகுப் பார்த்திருக்கின்றனர்.

ஹைக்காலுக்கு தீயணைப்பு வீரருக்கான சீருடை அணிவிக்கப்பட்டது. ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்புப்பணி வீரர்களுடன் ஹைக்காலும் தீயணைப்பு வண்டியில் ஏறி தீயை அணைக்கச் சென்றார். முதலில் தீயை கண்டு பயந்தாலும் பின்னர் தீயணைப்பு வீரர்களின் எவ்வாறு தீயை அணைப்பது என்பதைக் கற்றுக் கொடுத்ததும் ஹைக்கால் உற்சாகமானார்.

4 வயதில் இருந்தே ஹைக்காலுக்கு தீயணைப்பு வீரர் ஆக ஆசையென அவரது தந்தையார் முகமட் நோர்ஹிஷாம் ரிட்சுவான் கூறினார். தீயணைப்பு வண்டி எச்சரிக்கை ஒலியை எழுப்பிக் கொண்டே சென்றால் ஹைக்கால் உடனே ஓடிச் சென்று அந்த வண்டியைப் பார்ப்பார் என நோர்ஹிஷாம் சொன்னார்.

தற்போது தமது மகனின் ஆசையை நிறைவேற்றிய ‘Make-A-Wish Malaysia’ அமைப்புக்கும் ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்பு நிலையத்துக்கும்  நோர்ஹிஷாம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மிகவும் சுறுசுறுப்பாக இருந்த ஹைக்கால் கடந்தாண்டு ஒரு கட்டத்தில் இருந்து உடல் மெலிந்து அடிக்கடி காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர், கடந்தாண்டு அக்டோபரில்தான் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

பினாங்கு மருத்துவமனையில் ஹைக்காலு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது அவருக்கு கிமியோதெராப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹைக்காலின் தீயணைப்பு வீரர் ஆகும் ஆசையை நிறைவேற்றியது அவருக்கு வாழ்க்கையில் புது உத்வேகத்தை தந்திருக்கும் என தாம் நம்புவதாக நோர்ஹிஷாம் தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker