Latestஉலகம்

வெள்ளத்தில் மிதக்கும் தேவாலயத்தில்  திருமணம் புரிந்த தம்பதி

மணிலா, ஆகஸ்ட். 13- பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் மழையால் தேவாலயத்தினுள் வெள்ளம் புகுந்திருந்த நிலையிலும் இளம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ‘யாகி’ புயல் கடும் சேதத்தையும் பெரும் மழையையும் கொண்டு வந்துள்ளது பல பகுதிகள் வெள்ளக்காடாக கட்சி தருகின்றன. பல கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் புலாகான் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடந்தது.

இப்பகுதியில் குடியிருக்கும் 24 வயதான ஜோபல் டேலோஸ் தமது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இளைஞரை அந்த பெருமழை சூழ்ந்த நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பெரு வெள்ளமோ- பெரும் மழையோ வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் செய்து கொள்வோம். அதை ஏன் நாம் தள்ளிப்போடவேண்டும் என ஜோபல் மகிழ்ச்சி பொங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் நடந்த தேவாலயமானது தண்ணீரில் மூழ்கியிருந்தது. இதனால் தங்களின் திருமண உடைகள் நனைந்தன. ஆனால் அது பெரிதாக தெரியவில்லை என அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு சுமார் 20 புயல்கள் தாக்குவதுண்டு. தற்போது தாக்கியுள்ள ‘யாகி’ புயலால் சுமார் 20,000 மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker