Latestமலேசியா

எம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.14- பாகோ நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற டான்ஶ்ரீ மொகிடின் யாசின், நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரது நாடாளுமன்ற இடம் காலியாகக் கூடிய அபாயம் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

தேர்தலில் வெற்றிபெற்ற 6 மாத காலத்திற்குள் ஓர் உறுப்பினர் தனது பதவிப் பிரமாண உறுதி மொழியை எடுத்துக் கொண்டாக வேண்டும். இல்லையேல், அவரது இடம் காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு விடும். எனவேதான் தாம் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்டதாக டான்ஶ்ரீ மொகிடின் குறிப்பிட்டார்.

குடல் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையை முடிந்து தற்போது குணமடைந்து வரும் உள்துறை அமைச்சருமான டான்ஶ்ரீ மொகிடின் தெரிவித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker