Latestமலேசியா

கையாடல்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது!

அலோஸ்டார், ஆகஸ்ட். 14- மந்திரி புசாரின் சிறப்பு நிதியிலிருந்து 30,000 ரிங்கிட்டை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கெடா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. கைது செய்தது.

நேற்று பிற்பகலில் விசாரணைக்காக கெடா எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்த நபர், பின்னர் அங்கேயே கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரியில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவதற்காக மந்திரி புசாரின் நிதியில் ஒதுக்கீடு கோரி அவர் விண்ணப்பித்தார்.

அதன்படி அவருக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்றாலும் அந்த நிகழ்ச்சியை அவர் நடத்தவே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உள்ளாகி இருக்கும் அவர் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker