Latestமலேசியா

சிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி!

கோலாலம்பூர், ஆக.14- சிங்கப்பூருக்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீரின்  விலையை பத்து மடங்காக அதிகரிக்க தாம் பரிசீலித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

ஜொகூர் மாநிலம், மலாக்காவிற்கு 1,000 கேலன் நீரை 30 சென்னுக்கு விற்பனை செய்கிறது. உள்நாட்டு ஒப்பந்தத்தின் கீழ், ஜொகூர் மாநிலம் அந்த விலையில் நீர் விநியோகம் செய்கிறது.

சிங்கப்பூர்-மலேசியா ஆகிய நாடுகளுக்கான நீர் ஒப்பந்தத்தின் கீழ், 1,000 கேலன் நீரை மலேசியா 3 சென்னுக்கு விற்பனை செய்கிறது.  சுத்திகரிக்கப்பட்ட நீரை சிங்கப்பூரிடமிருந்து 50 சென்னுக்கு மலேசியா வாங்குகிறது.

“வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நீரின் விலையை நாங்கள் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று மகாதீர் அனைத்துலக செய்திப் பிரிவான ‘ஏபி’யிடம் கூறியுள்ளார்.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான அதிவேக இரயில் இணைப்புச் சேவை திட்டத்தை மலேசியாவால் தொடர முடியாது. அந்தத் திட்டத்திற்கான செலவுகள் குறைக்கப் பட்டால் மட்டுமே எங்களால் அதைத் தொடர முடியும்” என்று அவர் அறிவுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker