Latestமலேசியா

பினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை! மீண்டும் இணைப்பு!

ஜோர்ஜ் டவூன், ஆக.14- பொறாமையின் உச்சத்தில் தனது கணவனால் கை வெட்டப்பட்ட பெண்ணின் இடது கையை பினாங்கு மருத்துவமனையில் வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப் பட்டது.

சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த 24 வயது பெண்ணின் இடது கையை வெற்றிகரமாக பொருத்தினர் என்று அப்பெண்ணின் தாயார், பஸீரா பேகும் கூறினார்.

“என் மகள் இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். தனது பிள்ளைகளுக்காக அவள் தைரியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். நல்ல வேளையாக, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது.

“என் மகளின் கை மீண்டும் இணைக்கப் பட்டு, அவள் தனது கைகளை முன்பைப் போன்றே உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று பஸீரா சொன்னார்.

பாயான் லெப்பாஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில், கடந்த ஞாயிறுக்கிழமையன்று பொறாமையில் அந்த 24 வயது இளம் பெண்ணின் இடது கையை அவளின் கணவன் துண்டித்தான்.

அச்சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப் பட்டதும், தாங்கள் நள்ளிரவு 12.55 மணிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கு அந்தப் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஏ.அன்பழகன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  தேடுதல் நடவடிக்கையில், அப்பெண்ணின் 39 வயது கணவனை, போலீசார் அதிகாலை 3 மணிக்கு ஜாலான் மெல்கோம் என்ற பகுதியில் கைது செய்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker