Latestமலேசியா

அக்டோபர் 13-14 : 4-ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 13-14 ஆம் தேதிகளில் பேராக், தஞ்சோங் மாலிமில் அமைந்துள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கத்தில் 4-வது பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாடு தமிழ்ப்பிரிவு, நவீன மொழித் துறை, மொழித் தொடர்பாடல் புலத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொள்ளவதை ஊக்குவிப்பதற்கும், தங்களின் ஆய்வு முடிவுகளைப் படைப்பதற்கும் இம்மாநாடு தளம் அமைத்துத் தருகிறது.

மேலும், கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் தங்களின் பட்டறிவு, அனுபவம், புலமைத்திறம் ஆகியவற்றை ஒன்றுகூடிப் பரிமாறிக்கொண்டு, தங்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளவும் இம்மாநாடு துணைபுரிகிறது.

“21-ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கற்றல் கற்பித்தல்” எனும் கருப்பொருளைக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுகிறது. ஆய்வுச் சாரத்தினை ஆகஸ்ட் 15-ஆம் நாளும், முழுக்கட்டுரையினை செப்டம்பர் 10-ஆம் நாளும் iterc2018upsi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். உள்நாட்டு வெளிநாட்டு படைப்பாளரும் பங்கேற்பாளரும் 300 ரிங்கிட்டும் மாணவர்கள் 200 ரிங்கிட்டும் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவோருக்குச் 250 ரிங்கிட் சிறப்புக் கழிவு வழங்கப்படும். கட்டணத்தை, https://epayment.upsi.edu.my எனும் இணையத்தளம்வழி செலுத்தலாம்.

10 விரிவுரைஞர்கள் அடங்கிய மதிப்பீட்டாளர் குழுவால் இவ்வாய்வுக் கட்டுரைகள் யாவும் மதிப்பிடப்படவுள்ளன. மாநாட்டு நூல் அச்சு வடிவில் ISBN எண்களுடன் மாநாட்டு அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டைப் பற்றிய மேல் விவரங்களைப் பெற திரு அழகேசன் அம்பிகாபதியை +60124802627 எண்ணிலும், அல்லது முனைவர் முனீஸ்வரன் குமாரை +601126500184 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பன்னாட்டு அளவில் நான்காவது முறையாக நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பெருமாதரவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker