Latestஉலகம்

அலையில் சிக்கிய எஜமான் பேத்தியை காப்பாற்றிய நாய்! -(VIDEO)

பாரிஸ், ஆகஸ்ட்.15- பிரான்சில் கடல் அலையில் சிக்கிய எஜமானின் பேத்தியை, நாய் ஒன்று விரைந்து காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்ஸில், கோவெல் சர்மெர் பகுதியை சேர்ந்து ஒருவர் மத்தியாஸ் என்ற நாயினை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தன் பேத்தியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடலில் அந்த சிறுமி மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தார். நாயும் அவருடன் சேர்ந்து விளையாடிவாறு நின்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக பெரும் அலை ஒன்று சிறுமியை மூழ்கடித்து விட்டு செல்ல, உடனே ஆபத்தை உணர்ந்த அந்த நாய் சிறுமியின் ஆடையை வாயினால் கவ்வி மணல் பகுதிக்கு இழுத்து வந்துள்ளது.

கடந்த 3ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோவில் பார்வையாளர்கள் பலரும் நாயின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker