Latestஉலகம்

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்தது! 38 பேர் மரணம்!

ஜெனோவா, ஆகஸ்ட்.15- இத்தாலியின் ஜெனோவா நகரில் உள்ள மொராண்டி என்றழைக்கப்படும் மிகப்பெரிய பாலம் திடிரென இடிந்து விழுந்ததில் இதுவரை 38 பேர் மாண்டுள்ளனர். பாலத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படும் பலரை மீட்கும் பணி இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்களும் போலீஸ் படையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் பணிகளுக்கு போலீஸ் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

எல்லையை ஒட்டிய பிரான்ஸ் நகரம் ஒன்றை இணைக்கும் வகையில் மிக நீளமான கட்டப்பட்டிருந்த இந்தப் பாலம், கடும் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்த வேளையில் இடிந்து விழுந்தது.

பாலம் இடிந்து விழுந்த போது அந்தப் பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்கள் சில இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 35 வாகனங்கள் இதில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

பாலத்தின் ஒரு பகுதி, மாபெரும் கோபுரத்துடன் சேர்ந்து இடிந்து கீழே இருந்த ரயில் பாதையின் மீதும் ஆற்றின் மீதும் தொழிற்சாலைகளின் மீதும் விழுந்தது.

இந்தப் பாலம் இடிந்த போது அதில் சிக்கிக் கொண்ட இத்தாலி கால்பந்து லீக் குழுவான காக்லியரி குழுவின் கோல்கீப்பர் டேவிட் கப்பெல்லோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இதனிடையே இந்தப் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பில் விசாரணைகள் விரிவாக நடத்தப்படும் என்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker