Latestமலேசியா

இந்துக்களின் நலன் பேண புதிய சட்டம்!- பேராசிரியர் இராமசாமி

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்.15- நாடு முழுவதுமுள்ள இந்துக்களின் நலன் பேணுவதற்காக ஒரு சட்டம் வரையப்பட்டு வருவதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார். அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அது குறித்து முதலில் நாட்டின் உயர்மட்ட தலைவர்களிடம் விளக்கமளிக்கப்படும் என்றார் அவர்.

இந்த சட்டம் வரையப்படுவதன் மூலம் இந்துக்கள் அதிகமானோர் வாழும் மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும். இந்து அறப்பணி வாரியத்தை அமைப்பது பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

மாநில அளவில் இந்து அறப்பணி வாரியத்தை அமைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றுவதுதான் அவ்வாரியத்தை அமைக்க சிறந்த வழியாக இருப்பதாக இராமசாமி கூறினார்.

நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள், ஆலயம் சார்ந்த பிரச்சனைகள், கைவிடப்பட்ட இந்துச் சொத்துடமைகளை நிர்வகித்தல் ஆகியவையை உட்படுத்திய விவகாரங்களை இந்த அறப்பணி வாரியம் பார்த்துக் கொள்ளும். ஆனால், அவற்றைவிட மிக முக்கியமாக, இந்துகளின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் இந்த அறப்பணி வாரியத்தின் தலையாய கடமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker