Latestமலேசியா

கிம் ஜோங் நாம் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இரு பெண்கள் விடுதலை ஆவார்களா?

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- வடகொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பெண் சித்தி அய்ஷாவும், வியட்நாமிய பெண் டோன் தீ ஹுவோங்கும் விடுதலை ஆவார்களா அல்லது தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்படுவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.

கடந்தாண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி காலை மணி 9-க்கு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிம்மின் முகத்தில் ‘வி எக்ஸ்’ எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய இரசாயன திரவத்தை அவருடைய முகத்தில் சித்தி அய்ஷாவும், டோன் தீ ஹுவோங்கும் பூசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker