Latestமலேசியா

சுபாங்கில் ஹெலிகொப்டர் விபத்து; 2 விமானிகள் காயம்

சுபாங், ஆகஸ்ட்.15- இன்று காலை சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் ரோபின்சன் R-66 என்ற சிறுரக ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு விமானிகளுக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

காலை மணி 8.05-க்கு, நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அவ்விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சமயத்தில் இவ்விபத்து நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.

காயமடைந்த விமானிகளில் ஒருவருக்கு 59 வயது, மற்றொஉவருக்கு 70 வயது ஆகும்.

இந்த விபத்தால், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker