Latestஇந்தியா

செப்டம்பர்- 12 இல் திமுக தலைவராகிறார் ஸ்டாலின்

சென்னை, ஆகஸ்ட் 15- திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் புதிய தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்ய கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் செப் 12இல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

புதிய தலைவரானதும் முதல் நடவடிக்கையாக கட்சியை வலுப்படுத்த மாநில நிர்வாகிகளை மாற்றவும் அவர் முடிவு செய்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார்.

அவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற சென்னை அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் நேற்று ஸ்டாலின்
தலைமையில் நடந்தது. அதில் பேசியவர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்ற அவரது வழியில் பயணிப்போம் என உறுதி அளித்தனர்.

ஸ்டாலினுக்கு எதிராக அவர் அண்ணன் அழகிரி தூக்கியுள்ள போர்க்கொடியின் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக திமுகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அதை உறுதிப்படுததும் வகையில் துணை பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி பேசுகையில், திமுகவை உடைக்க மத்திய அரசு சதி செய்கிறது என்றார்.

இதற்கிடையில் கட்சியில் தன்னை மீண்டும் சேர்க்க மறுத்தால் திமுக மற்றும் முரசொலி அறக்கட்டளை சொத்துக்களை தொடர்பாக பிரச்சனையை கிளப்ப அழகிரி ஆயத்தமாக வருகிறார்.

அழகிரியின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி சென்னையில் பொதுக்குழுவை கூட்டி திமுக தலைலர் பொறுப்பை ஏற்க ஸ்டாலின் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker