Latestமலேசியா

தற்காப்பு அமைச்சில் யாரை வேண்டுமானாலும் எம்ஏசிசி விசாரிக்கலாம் – மாட் சாபு

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- தமது அமைச்சிலும் சரி தமது அலுவலகத்திலும் சரி யாரை வேண்டுமானாலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கலாம் என தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு கூறியுள்ளார். அதே சமயம் விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நெறி விவகாரத்தில் யார் தவறு இழைத்தாலும் தாம் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் 8 லட்சம் ரிங்கிட் கையூட்டுப் பெற்றது தொடர்பில் அவரை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

திவாலாகிப் போன ஒருவரின் பெயரை கறுப்பு பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்காக அவரிடம் அந்த அதிகாரி அத்தொகையை கையூட்டாக வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker