Latestமலேசியா

பிஏசி மீண்டும் 1எம்டிபி விசாரணையை தொடங்க வேண்டும்- லிம் குவான் எங்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- 1எம்டிபி ஊழல் விசாரணையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) மீண்டும் தொடங்க வேண்டும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் மக்களவையில் கோரிக்கையை முன்வைத்தார்.

அதோடு, விசாரணை தொடர்பிலான அனைத்து விவரங்களும் வெளிப்படையாக மக்களவையில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது கோரிக்கையில் கூறியிருந்தார்.

அக்கோரிக்கை மக்களவையின் இன்றைய செயல் அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

நிதி அமைச்சரின் கோரிக்கை மக்களவை அமர்வின் கடைசி நாளான நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker