Latestஉலகம்

பிரான்சில் குப்பைகளை அகற்றும் பணிகளைச் செய்யும் காக்கைகள்! (VIDEO)

பாரிஸ், ஆகஸ்ட்.15- பிரான்ஸிலுள்ள பூங்கா ஒன்றில் சிதறிக் கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து அகற்றுவதற்கு 6 மதிநுட்பமிக்க காகங்களுக்கு பயிற்சி கொடுத்து துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி அந்த 6 காகங்களுக்கும் குப்பைகளை சேகரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் காகங்கள் குப்பைகளைச் சேகரித்து உரிய இடத்தில் போடும் ஒவ்வொரு தடவையும் அவற்றுக்கு அவற்றின் செயலைப் பாராட்டும் வகையில் வெகுமதியாக உணவளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தக் காகங்களுக்கு தற்போது சிகரெட் அடிக்கட்டைகள் மற்றும் ஏனைய சிறிய பொருட்களை சேகரித்து அகற்றுவதற்கு வெற்றிகரமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பூங்காவின் தலைவர் நிகொலஸ் டி விலியர்ஸ் தெரிவித்தார்.

முதல் தொகுதி காகங்கள் ஏற்கனவே வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த தொகுதி காகங்கள் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக அவர் கூறினார். இயற்கைக்கு சுயமாகவே சுற்றுச்சூழலை பராமரிப்பது தொடர்பில் எமக்கு போதிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதாக இது உள்ளது என அவர் கூறினார்.

மேற்படி ரூக் இனவகை காகங்கள் மனிதர்களோடு தொடர்புகளை மேற்கொள்ளவும்- உறவைப் பேணவும் கூடிய வகையிலான மதி நுட்பம் கொண்டவையாக உள்ளதாக விலியர்ஸ் கூறினார். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் காகங்கள் கொண்டுள்ள ஆற்றலை எடுத்துக்காட்ட விஞ்ஞானிகள் இயந்திரமொன்றை இவ்வருட ஆரம்பத்தில் உருவாக்கியிருந்தனர்.

இதன் போது காகங்கள் அந்த இயந்திரத்தில் சரியான அளவிலான காகித வில்லைகளை ஞாபகப்படுத்தி உட்செலுத்துவதன் மூலம் தமக்குரிய உணவு வெகுமதிகளை பெற்று கொள்வதற்கான ஆற்றலைக்
கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker