Latestமலேசியா

மஞ்சள் பலூன் அவமதிப்பு: வழக்கை கைவிட்டார் நஜிப்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- மூன்றாண்டுகளுக்கு முன், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பும் அவரது துணைவியாரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், 5-ஆவது மாடியிலிருந்து மஞ்சள் நிற பலூன்களைக் கீழே வீசி எறிந்தது மரியாதைக் குறைவான செயல் என்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பில்கிஸ் ஹிஜ்ஜாஸ் என்ற பெண் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

பில்கிஸ் மீது வழக்குத் தொடுத்திருந்த நஜிப் தரப்பினர் அந்த வழக்கைத் தொடர விரும்பாததால், உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி இத்தீர்ப்பை வழங்கினார்.

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெவிலியன் விற்பனை வளாகத்தில், நஜிப்பும் ரோஸ்மாவும் 24 நாடுகளின் தூதர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், “மக்களாட்சி”, “நீதி”, “ஊடக சுதந்திரம்” என எழுதப்பட்டிருந்த மஞ்சள் நிற பலூன்களை பில்கிஸ் பறக்கவிட்டார். அது மரியாதைக் குறைவான செயல் என்றும் நாட்டை அவமதிக்கும் செயல் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பில்கிஸ், ஒரு நடனமணியும் பிரபல கட்டடக் கலை வல்லுனருமான ஹிஜ்ஜாஸ் கஸ்தூரியின் மகள் ஆவார்.

1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker