Latestமலேசியா

வான் அஸிஸா, மிக பிரபலமான அமைச்சர்- மெர்டேக்கா மைய ஆய்வு

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.15- மலாய்க்காரர்கள் மத்தியில் மட்டுமல்ல மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான அமைச்சராக இருப்பவர் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா என மெர்டெக்கா மையம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மாறாக, நிதியமைச்சர் லிம் குவான் எங், கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் ஆகியோர் மீதான ஆதரவு மலாய்க்காரர்கள் மத்தியிலும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் வெவ்வேறு மாதிரி இருப்பதும் இந்த ஆய்வில் தெரிகிறது.

இம்மாதம் 7-ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நடத்தப்பட்ட ஆய்வில் வான் அஸிஸாவுக்கு 75 விழுக்காடு ஆதரவு கிடைத்துள்ளது. 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே அவர் மீது மனநிறைவு இல்லை.

மலாய்க்காரர்களில் 71 விழுக்காட்டினரும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்களில் 84 விழுக்காட்டினரும் வான் அஸிஸாவை ஆதரிக்கின்றனர்.

இதனிடையே, மலாய்க்காரர்கள் மத்தியில் லிம் குவான் எங் மிகவும் பிரபலமாக இருக்கிறார். 84 விழுக்காட்டினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, அவருக்கு 60 விழுக்காட்டு ஆதரவு கிடைத்துள்ளது.

அமைச்சரவையில் உள்ள 7 முக்கிய அமைச்சர்களில் மஸ்லிதான் பிரபலம் இல்லாதவராக இருக்கிறார் எனவும் ஆய்வு காண்பிக்கிறது. ஏனெனில், அவருக்கு 50 விழுக்காட்டு ஆதரவு மட்டுமே கிடைத்திருக்கிறது.

1160 பேரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இந்த புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker