Latestமலேசியா

‘விசுவாசம் என்பது குற்றங்களுக்கு துணை போவதல்ல!’ -மகாதீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட். 15- பொறுப்பில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு விசுவாக இருங்கள். ஆனால், அதேவேளையில் ஒரு குற்றத்தைப் புரிகின்ற அளவுக்கு நீங்கள் விசுவாசம் பாராட்டக்கூடாது என்று அரசு நிர்வாக மற்றும் அரச தந்திரத் துறை சேவையாளர்களுக்கு அறிவுறுத்தினார் பிரதமர் துன் மகாதீர்.

அரசாங்கத்திற்காக சேவையாற்றுவதற்கும் அரசாங்கம் புரியும் தவறுகளைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டு இருப்பதற்கும் வேறுபாடு உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘அன்றைய தினம் பொறுப்பில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு போலீஸ், இராணுவம் மற்றும் நிர்வாக மற்றும் அரச தந்திர அதிகாரிகள் விசுவாசமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

ஆனால், அதற்கு அர்த்தம், நீங்கள் ஒரு குற்றத்தைப் புரியும் நிலைக்கோ அல்லது குற்றங்களுக்கு உடந்தையாகவோ இருக்கும் அளவுக்கோ சென்று விடக்கூடாது’ என்று மகாதீர் சொன்னார்.

”ஒரு பிரதமர் என்ற முறையில், யாரையாவது கொலை செய்யுங்கள் என்று நான் சொன்னால், நீங்கள், நான் சொன்ன மாதிரியே போய் கொலை செய்வீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நிர்வாக மற்றும் அரச தந்திர அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்றுதான் செயல்படுவார்கள். ஆனால் ஓர் உயர் அதிகாரி குற்றங்கள் தொடர்பான தடயங்களை மறைக்கும் படி உத்தரவிட்டால் அதை அப்படியே செய்வீர்களேயானால் அது தவறல்லவா? என்று அவர் வினவினார்.

உதாரணமாக, ஒரு அரசியல் கட்சிக்காக பிரசாரம் செய்யும்படி உங்களுக்கு உத்தரவிடப் படுவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் முடியாது என்று மறுக்கவேண்டும். அப்படிச் செய்தால், நீங்கள்- உங்கள் மேலதிகாரியால் தண்டிக்கப்படலாம். ஆனால் எல்லா அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ‘முடியாது’ என மறுத்தால், உங்களை யாரால் தண்டிக்க முடியும்? என்று மகாதீர் கேட்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker