Latestஇந்தியா

ஹெலிகாப்டர் விசிறியில் தலை துண்டிக்கப்பட்டு பலியான பக்தர்!

காட்மாண்டு, ஆகஸ்ட்.16- நேபாளத்தின் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர் ஒருவர் ஹெலிகாப்டர்  விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு பலியான திகில் சம்பவம் நடந்துள்ளது.

திபெத்தின் மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4,590 மீட்டர் உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும். இதன் நீரை பருகும் நபர் இறப்பிற்கு பின் சிவபெருமானை சென்றடைவார் என்றும் 100 ஜென்மத்தில் செய்த பாவங்கள் தீரும் எனவும் நம்பப்படுகிறது.

எனவே இப்புனித தலத்திற்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து யாத்ரீகர்கள் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு கடந்த ஜீன் 20ஆம் தேதி லிப்புலேக் கணவாய் வழியாக மானசரோவர் புறப்பட்டு சென்றது.

இங்குள்ள ஹில்ஸா மற்றும் சம்கோட் பகுதிகளுக்கு இடையே சாலை வசதிகள் இல்லாததால் சிறிய ஹெலிகாடப்டரில் செல்கின்றனர்.
இந்நிலையில் ஹில்ஸா பகுதியில் தரையிறங்கிய ஹெலிகப்டரில்  இருந்து இறங்கிய யாத்ரீகர் ஒருவர் முன்னோக்கி செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்றார்.

இதில் ஹெலிகாப்டரின் வால் பகுதியில் சுழன்று கொண்டிருந்த விசிறியில் சிக்கி தலை துண்டிக்கப்பட்டு பலியானார். உயிரிழந்தவர் மும்பையைச் சேர்ந்த நாகேந்திரகுமார் கார்த்திக் மேத்தா (வயது 42) என தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker