Latestமலேசியா

ஶ்ரீசெத்தியா இடைத்தேர்தல்: லெம்பா பந்தாய் எம்.பி. போட்டியா?

கிள்ளான், ஆகஸ்ட். 16- நடப்பு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஃபாமி பட்ஜில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஶ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவார் என்று பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் வழி ஃபாமி பட்சில் தம்முடைய லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியை காலிச் செய்வார் என்றும், அங்கு பிகேஆர் தேசியத் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்கு வழியமைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

அதேவேளையில் ஶ்ரீசெத்தியா இடைத்தேர்தலில் போட்டியிடும் ஃபாமி பட்ஜிலை பின்னர் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெறச் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி ஶ்ரீசெத்தியா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாஹாருடின் காலமானதை அடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker