Latestமலேசியா

அபாயகரமாக ரேபிட் பஸ் ஓட்டிய ஆடவர் போதைப்பித்தரா?

கோலாலம்பூர், ஆகஸ்ட்.17- நேற்றிரவு ஜாலான் அம்பாங்கில் தாறுமாறாக ரேபிட் கேஎல் பேருந்தை ஓட்டி 7 வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவத்தின்போது ஷாபு வகை போதைப்பொருள் உட்கொண்டிருந்ததை போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் உட்கொண்ட போதையில் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக பேருந்தை செலுத்திய அந்த 32 வயது ஓட்டுநர் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 42-வது செக்‌ஷனின் முதலாம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, பொதுமக்களில் சிலர் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை தாக்கியது தொடர்பில் யாராவது போலிஸ் புகார் அளித்தால் அது குறித்து விசாரணை நடத்துவோம் என மஸ்லான் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker