Latestமலேசியா

அனைத்துலக புத்தாக்கப் போட்டி: தமிழ்ப் பள்ளிகளின் தங்க வேட்டை!

கோலாலம்பூர், ஆக.18- கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2018 அனைத்துலக புத்தாக்கப் போட்டியில், நான்கு தமிழ்ப்பள்ளிகள் வெவ்வேறு பிரிவுகளில் தங்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற ஜொகூர், மாசாய் தமிழ்ப்பள்ளி, பொறியியல், தொழில்நுட்பம் பிரிவிலும் சிறப்பு விருதைப் பெற்றுது. ஜொகூரைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியான யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி இயற்கை அறிவியல் பிரிவில் தங்கத்தையும் சிறப்பு விருதையும் வென்றது.

சிலாங்கூர், பூச்சோங் தமிழ்ப்பள்ளி வாழ்நாள் அறிவியல், மருந்துக்கான பிரிவில் தங்கத்தையும் சிறப்பு விருதையும் பெற்றது. இந்த பள்ளிகளைத் தவிர பூசாட் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி தங்கம் வென்ற வேளையில், ஜெஞ்சாரோம் , சிகாமாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கங்களை வென்றன. அதேவேளையில் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கம் வென்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker