Latestமலேசியா

காணாமல் போன ரிம. 19.52 பில்லியன்: லிம் குவான் எங் போலீசில் புகார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட். 18- ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் விற்பனை வரிப் பணத்தில் திருப்பிக் கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 19.52 பில்லியன் ரிங்கிட் தொகை காணாமல் போயிருப்பது குறித்து நிதியமைச்சரும் ஜசெகவின் பொதுச் செயலாளருமான லிம் குவான் எங் போலீசில் இன்று புகார் செய்தார்.

இந்தப் போலீஸ் புகார் பின்னர் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் வழங்கப்படும். இதன் பின்னரும் காணாமல் போன இந்தக் கோடிக்கணக்கான நிதி விவகாரம் குறித்து அவர் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று அறிக்கை ஒன்றில் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

காணாமல் போன இந்தப் பணத்தினால் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 129 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பாதிப்படைந்து இருக்கின்றனர்.
முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் காணாமல் போன இந்தப் பணம் தொடர்பான கேள்விகளுக்கு நஜிப் இதுவரை முறையான பதிலை அளிக்க மறுத்து வருகிறார் என்று லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரவேண்டும் என்று பக்காத்தான் அரசாங்கம் கருதுகிறது. போலீஸ் விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker