Latestமலேசியா

ஜோ லோ ஒரு கோழை- லிம் குவான் எங்

பாங்கி,ஆகஸ்ட்.18- தேடப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ இன்னும் சரணடையாமல் ஒளிந்து கொண்டிருப்பது அவருடைய கோழைத்தனத்தைக் காண்பிப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

தான் குற்றம் செய்யவில்லை என நினைத்தால் ஜோ லோ ஏன் நாட்டைவிட்டு தப்பித்து போக வேண்டும்? தொடர்ந்து பதுங்கியிருக்க வேண்டும்? என அவர் கேட்டார்.

முன்பு தனக்கு பக்கபலமாக ஒரு பெரிய தலைவர் இருந்ததால், ஜோ லோ தைரியமாக இருந்தார். இப்போது அந்த தலைவர் போனதும், ஜோ லோ பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என லிம் குவான் எங் சுட்டிக் காட்டினார்.

1எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் சிக்கிக்கொண்டுள்ள ஜோ லோ தான் சரணடையப் போவதில்லை; தன்னை நியாயமுடன் மலேசிய அரசாங்கம் நடத்தப் போவதில்லை என நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்பில், லிம் குவான் எங் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker