Latestமலேசியா

மலேசிய நகரங்களில் புகைமூட்டம் தொடர்கிறது!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.18- மலேசியாவில் பெரும்பாலான நகரங்கள் இன்னமும் புகை மூட்டத்தில் சிக்கியுள்ளன என்று மலேசிய வானிலை துறையின் தலைமை இயக்குனர் அலுய் பஹாரி தெரிவித்தார்.

தற்போதைய புகை மூட்டம் மிக மோசமானதாக, குறிப்பாக கடந்த 2015-இல் இருந்த போன்று மிகக் கடுமையானதாக இல்லை. சபா மற்றும் சரவாவில் மொத்தமாக ஐந்து இடங்களில் காடுகள் அழிப்பினால் புகை பரவி வருவது தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

எனினும், இந்தோனிசியாவின் கலிமந்தானில் 170 இடங்களிலும் சுமத்ராவில் இரண்டு இடங்களிலும் இருந்து புகை பரவி வருகிறது. மலேசியாவின் 61 நகரங்களில் புகை மூட்ட அளவு, காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீடான் ஏபிஐ – குறியீட்டில் 100க்கும் குறைவாக இருந்தன.

கிள்ளானில் ஜொகான் செத்தியாவில் ஏபிஐ குறியீடு 119 ஆக காணப்பட்டது. இது, சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு என்று கருதப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker