Latestமலேசியா

லோரியுடன் மோதிய வாகனம்: சிம்பாங் புலாய் அருகே மூவர் மரணம்!

ஈப்போ, ஆகஸ்ட். 19- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சிம்பாங்
புலாய்க்கு அருகில் வாகனம் ஒன்று லோரியின் பின்புறத்தில் மோதி
விபத்துக்கு உள்ளானதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூவர்
பலியாயினர்.

அதிகாலை 4.20 மணியளவில் நடந்த இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த
மூன்று ஆடவர்களும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்திப் பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற அந்த லோரியின் ஓட்டுனரும் காயமடைந்தார். அந்த லோரியின் பின்புறத்தில் மோதிய வேகத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூவரும் வெளியே தூக்கியெறியப் பட்டனர். அந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker