Latestஉலகம்

சுவிஸில் மூடப்படும் அகதி முகாம்கள்! இலங்கையரின் நிலை?

பெர்ன், ஆகஸ்ட்.20- சுவிட்சர்லாந்தில் அகதிகளுக்காக செயல்பட்டு வந்த முகாம்களை அரசு நிர்வாகம் படிப்படியாக மூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுவிட்சர்லாந்தில் அகதிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். இது அங்குள்ள அரசு நிர்வாகத்தினரை திணறடிக்க செய்தது.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் நோக்கி படையெடுத்து வந்த அகதிகளின் எண்ணிக்கையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கை வைத்துள்ள அகதிகளின் எண்ணிக்கை வெறும் 7,820 எனக் கூறப்படுகிறது.

இதனால், அகதிகள் முகாம்களாக செயல்பட்டு வந்த பெரும்பாலான மாநிலங்கள் கடந்த 2 ஆண்டுகளில் பல கணக்கிலான முகாம்களை மூடியுள்ளனர். மேலும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் முகாம்களில் தற்போது 3,000 காலி இடங்கள் உள்ளதாகவும் இது 5 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமின்றி அகதிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் கட்டுபாட்டில் செயல்பட்டு வந்த சுமார் 19 முகாம்களை கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே படிப்படியாக மூடி வந்துள்ளது.

இதில் குறிப்பாக அதிகளவில் இந்த நாட்டுக்குள் வருகை தந்த இலங்கையர்கள் எண்ணிக்கையிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முழுமையாக இலங்கையர்கள் வராமலும் போக வாய்ப்பு இருப்பதாக கூறும் சுவிட்சர்லாந்து செய்திகள் அண்மையில் சுவிட்சர்லாந்து – இலங்கை இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker