Latestமலேசியா

திருநங்கைகள் மீது தாக்குதலா? துணையமைச்சர் கண்டனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட், 20. திருநங்கைகள் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தினார்.

இதர பிரஜைகளைப் போல திருநங்கைகள் சமூகமும் தங்களின் சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உண்டு. எனவே அவர்கள் மீதான தாக்குதல் என்பது அத்தகைய உரிமைக்குள் அப்பட்டமாக அத்துமீறுவதாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் நெகிரி செம்பிலானில் திருநங்கை ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைத்த போது துணையமைச்சர் ஹன்னா மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அந்தத் திருநங்கையின் விலா எலும்புகளில் கடும் முறிவு ஏற்பட்டிருப்பதோடு, மிகக் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் சிகாம்புட் எம்பியுமான ஹன்னாவும் வழக்கறிஞர் ஷையாரிட்ஷான் ஜொகானும் விடுத்த அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு கூறினார்.இது போன்ற தாக்குதல்கள் அடிக்கடி திருநங்கைகளுக்கு எதிராக நடந்து வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker